ரினியூஎக்ஸ் 2026: தென் இந்தியாவின் பிரமாண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி!

கோவை: தென் இந்தியாவின் பிரமாண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சியான ரினியூஎக்ஸ் ஏப்ரலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவையில் நேற்று நடைபெற்றது.

அப்போது இன்பார்மா மார்க்கெட்ஸ் இன் இந்தியா நிறுவனத்தின் மூத்த இயக்குனர் ரஜ்னீஷ் கட்டார் கூறியதாவது:-

தூய்மையான எரிசக்தியைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உருவெடுத்துள்ளது. மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் பயணத்தில் தன்னை முன்னிலையில் நிறுத்தியுள்ளது.

Advertisement

2030-ம் ஆண்டுக்குள் தூய்மையான எரிசக்தியில் தேசிய அளவில் தலைசிறந்து விளங்க வேண்டும் என்ற உறுதியான தொலைநோக்குப் பார்வையுடன், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் என இரண்டிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து, மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை புதிய உச்சங்களை எட்டியுள்ளது.

தென் இந்தியாவின் முதன்மையான பசுமை எரிசக்தி கண்காட்சியான ரினியூஎக்ஸ் 2026, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ஏப்ரல் 27 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

Advertisement

இந்த கண்காட்சியில் இந்தியா, சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இதில் தென் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தை, அதிகரித்து வரும் மின் தேவைகள், துரித கதியில் நடைபெறும் தொழில்மயமாக்கல் மற்றும் தொலைநோக்கு எரிசக்திக் கொள்கைகள் குறித்து விவாதிக்க, தொழில்துறை வல்லுநர்கள், முக்கிய முடிவெடுப்பவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.

renewx expo

முக்கிய பங்குதாரர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தீர்வு வழங்குனர்களை ஒன்றிணைப்பதன் மூலம், முதலீடுகள், புதிய தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் இப்பகுதிக்கான நிலையான எரிசக்தி எதிர்காலத்தோடு ஆற்றல்மிக்க தளத்தை நாங்கள் உருவாக்க இருக்கிறோம்.

2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அடைய வேண்டும் என்ற இந்திய அரசாங்கத்தின் இலக்கோடு இணைந்து பயணிப்பதும், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பயணத்தில் பங்களிப்பதும் தான் எங்களது தொலைநோக்குப் பார்வை. என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத் தலைவர் சந்தோஷ், எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் செல்லப்பன், கேஆர்ஜி பவர் சோலார் இயக்குனர் சிவராம்,

கேரளா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்முனைவோர் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் சங்கத் தலைவர் டெரன்ஸ் அலெக்ஸ், தமிழ்நாடு சூரிய ஒளி மின்சக்தி மேம்பாட்டாளர்கள் சங்க தலைவர் சிவக்குமார், இன்பார்மா மார்க்கெட்ஸ் இந்தியா எரிசக்தி மற்றும் கட்டுமானப் பிரிவு மூத்த குழு இயக்குனர் ரஜ்னீஷ் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

TNPSC குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியீடு: விண்ணப்பிக்க லிங்க் இதோ…

TNPSC குரூப்-1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. செப்டம்பர் 6-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...