கோவை: கோவையில் 181 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் ரெட்டி, உத்தரவின்பேரில், கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி சாலை அருகே சந்தேகத்திற்கிடமாக இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி (39)ப்என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 181 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர் மீது பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மேற்படி நபர் காவல்துறையினரால் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.




