அரை நிர்வாண நிலையில் பெண் சடலம்- கோவையில் பரபரப்பு- போலிசார் விசாரணை…

கோவை: கோவை அருகே அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகர் கோவை புதூர் பகுதியில் இன்றுஅரை நிர்வாண நிலையில் கிடைத்த பெண் சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

கோவை புதூர் சி.பி.எம் கல்லூரிக்கு அருகே உள்ள மரங்கள் புதர்கள் அதிகம் உள்ள ஓர் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அரை நிர்வாண நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

​இறந்த பெண் யார்? கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...