தமிழ்நாடு (கோவை) போலீசார் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு- எல்லைப்பகுதியில் பரபரப்பு

கோவை: கேரள மாநிலம் அட்டப்பாடியில் ஒருவரை தாக்கியதாக எழுந்த புகாரில், தமிழ்நாடு போலீசார் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே புதூர் குளப்பாடி பகுதியைச் சேர்ந்த முருகேஷ் (51) என்பவரை தமிழ்நாடு தடாகம் போலீசார் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கேரள போலீசார் தமிழ்நாடு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புகாரின்படி, இரவு நேரத்தில் முருகேஷை சந்தித்த தமிழ்நாடு போலீசார், “கஞ்சா வைத்துள்ளாயா?” என்று விசாரித்ததாகவும், பின்னர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் முருகேஷுக்கு விலா எலும்பு முறிவு மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த முருகேஷ் தற்போது கேரளாவில் உள்ள கோட்டத்தற அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

மேலும், முருகேஷின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்பு, கேரள போலீசாருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர். மேலும், தற்போது வரை முருகேஷ் மீது தமிழ்நாடு போலீசில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

சம்பவம் தொடர்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு போலீசார் தரப்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தவெகவிற்கு ஆதரவு ஏன்? வெளிப்படையாக பேசிய எஸ்.பி.வேலுமணி…

கோவை: திமுக எதிர்ப்பு என்பதால் தான் தவெகவிற்கு ஆதரவளித்தோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அதிமுக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.