குழந்தையின் பெயரை பிறப்பு பதிவேட்டில் உடனடியாக சேர்க்க வேண்டும்- இந்திய தலைமை பதிவாளர் அறிவுறுத்தல்…

கோவை: பிறப்பு பதிவேட்டில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பிறப்புப் பதிவுச் சட்டம்1969 (2023ல் திருத்தப்பட்டது)பிரிவு 14 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகள் 2025, விதி எண் 10ன் கீழ், குழந்தையின் பெயர் பதிவு செய்யும்போது விதி எண் 101ன்படி பிறப்பு நிகழ்வு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெயர் எவ்வித கட்டணமும் இல்லாமல் பிறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், 12 மாதங்களுக்கு மேல் 15 ஆண்டுகள் வரை ரூபாய் 200/- காலதாமதக் கட்டணம் செலுத்தி பிறப்புப் பதிவேட்டில் குழந்தையின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போது பிறப்புப் பதிவேட்டில் பெயர் இல்லாமல் பதிவு செய்யப்பட்டு 15 வருடங்கள் முடிவடைந்த அனைத்து பிறப்புப் பதிவுகளிலும் குழந்தையின் பெயரைச் சேர்க்க 26.09.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தலைமைப் பதிவாளர் இதுகுறித்து இனி கால அவகாசம் வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

எனவே, கால அவகாசம் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.