மதுப்பழக்கத்தை நிறுத்திய வாலிபருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: மதுப்பழக்கத்தை நிறுத்திய வாலிபர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை புலியகுளம், பஜார் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (66). இவரது இளைய மகன் பிரபு (32). பிரபு கேரள மாநிலம் பாலக்காட்டில் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையான மது பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பிரபு மது ஏதும் குடிக்காமல் இருந்துள்ளார்.

திடீரென மதுவை நிறுத்தியதால், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் அவர் தனது தாயாரிடம் வெளியே செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் பிரபு சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள வாலாங்குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...