கோவையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபர் கைது…

கோவை: கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை சீரநாயக்கன் பாளையம், டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி சரவணதேவி (23). இவர் கோவை பி.என்.புதூர், புளியமரம் பேருந்து நிறுத்தம் அருகே தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.

கடந்த 20ம் தேதி இரவு சரவணதேவி தனது கடையில் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், கடையில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சரவணதேவியிடம், “நீ இந்த இடத்தில் தொடர்ந்து கடை நடத்த வேண்டுமானால், எனக்கு உடனடியாக 1,000 ரூபாய் தர வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

அதற்கு சரவணதேவி தன்னிடம் பணம் இல்லை என்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணதேவிக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார். அவரின் சத்தத்தை கேட்டு, கடையின் அருகே இருந்த பொதுமக்களும், மற்ற வியாபாரிகளும் ஓடி வந்து அந்த நபரை பிடிக்க முயன்றனர்.

Advertisement

ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சரவணதேவி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் பணம் கேட்டு மிரட்டியது சீரநாயக்கன் பாளையம் பாரதியார் வீதியை சேர்ந்த பத்மநாபன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...