கோவை: தவெக ஆட்சியில் ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகள் போல் பேசுகிறார்கள் என்று அமைச்சர் விஜய்பாலாஜி பேசியுள்ளார்.
கோவை அவிநாசி சாலை லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் தொழில்நுட்ப ஜவுளிக்கான இயக்கம் தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கைத்தறி துணை நூல் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மேலும் இந்த நிகழ்வில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீகிரி பிரசாத், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் ஜவுளித்துறை நிறுவனத்தினர் ஜவுளித்துறை சங்கத்தினர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் 123 கோடி மதிப்பில் 5 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்த துறையின் முதன்மை செயலாளர் வெங்கடேஷ், துறை சார்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் தற்பொழுது நிலை 5 வருடத்தில் எவ்வாறு இந்த துறையை முன்னேற்றுவது என்பது குறித்து விவரித்தார்.
இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் விஜய்பாலாஜி, புதிய அரசாங்கம் வரும் போது முதன்மை செயலாளர் எங்களிடம் எந்த வருடத்திலும் இல்லாதாவறு இம்முறை அதிக முதலீட்டாளர்கள் வந்துள்ளதாக கூறியதாக தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்தது முதலில் இருந்து எல்லாமே மாற்றம் தான் என்று கூறிய அவர், IAS அதிகாரியே அரசியல்வாதி போன்று பேசுகிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது என்னவாக இருந்தாலும் அது முதலீடாக தான் இருக்க வேண்டும் என்றும் கடந்த 20 ஆண்டுகள் கழித்து இந்த பொறுப்பை இந்த மண்டலத்தை சார்ந்தவருக்கு முதல்வர் வழங்கி உள்ளார், அமைச்சர் எனக்கு தெரியாத பல விஷயங்களும் உள்ளது அப்படி இருக்கும் போது முதன்மை செயலாளரிடம் கேட்டு செயல்படுகிறேன் என்றார்.
தற்போது பங்களாதேஷ் க்கு ஆர்டர்கள் எல்லாம் செல்கிறது அதனை மீட்டு கொண்டு வர என்னென்ன செய்ய வேண்டுமோ அதை அரசு செய்யும் என்று உறுதி அளித்தார்.
கருவறையில் இருந்து கல்லறை வரையிலும் இந்த துறை உள்ளது ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது என்றும் கடந்த காலத்தை பற்றி பேச வரவில்லை இனி புதிதாகவே ஒரு விஷயத்தை துவக்குவோம், தமிழர்களால் ஒன்று முடியவில்லை என்றால் வேறு எவராலும் செய்ய முடியாது என்றார்.
5 வருடங்களில் இந்த துறையில் உலகததரம் வாய்ந்ததாக மாற்றுவோம் என்றார். ஒருங்கிணைந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு வெற்றிக்கழகம் விஷின் 2026 செயல்படுதப்படுவதாக தெரிவித்தார்.
பொங்கலுக்கு வேஷ்டி சேலை வழங்குவதில் முழு கவனம் உள்ளது என்று கூறினார். இந்த துறையை நான் காதலிக்கிறேன் என்றும் முதலில் என வனத்துறை என்று தான் கூறினார்கள் ஆனால் எனக்கு இந்த துறை வேண்டும் என எண்ணினேன் என்றார்.
பழைய காலத்தை போலவே இந்த துறையை அரசாங்கம் கொண்டு செல்லும் 5 புரிந்துணர்வு ஒப்பந்த போட்ட தொழில் நிறுவனங்களுக்கு நன்றிகள், எதை நினைத்து நீங்கள் மாற்றத்தை கொண்டு வந்தீர்களோ அதனை எங்களால் செய்ய முடியும் என்று கூறி நன்றி தெரிவித்தார்.



