கோவை: கோவையில் வீட்டில் விபசாரம் நடத்தி வந்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளலூர் பகுதியில் ஒரு வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தொடர்ந்து போத்தனூர் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய ஒரு வீட்டில் அதிரடியாக புகுந்து விசாரணை நடத்தினர்.
அதில் அங்கு இளம் பெண்ணை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட கோவை நடுப்புனியை சேர்ந்த 45 வயது பெண் மற்றும் தித்திப்பாளையத்தை சேர்ந்த 21 வயது பெண், 42 வயது பெண் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையில் மசாஜ் சென்டர் நடத்துவது போலவும், குடும்பம் நடத்துவது போலவும் அறைகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து இத்தகைய சம்பவங்கள் அரங்கேறி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.



