கோவை வரும் துணை ஜனாதிபதி- ட்ரோன் பறக்க தடை…

கோவை: துணை குடியரசு தலைவர் வருகையால் கோவையில் மூன்று தினங்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை வருகை புரிய உள்ளதை முன்னிட்டு 3 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய நர்சிங் கல்லூரியை துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளைய தினம்(22.07.2026) திறந்து வைக்கிறார்.

இதனை முன்னிட்டு கோவை மாநகரில் ஏற்கனவே சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து ரேஸ்கோர்ஸ், அவினாசி ரோடு, லட்சுமி மில், குப்புசாமி நாயுடு மருத்துவ மனை வளாகம், ஹோப்ஸ், கொடிசியா,சின்னியம்பாளையம்,
காளப்பட்டி, நேருநகர் போன்ற பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கபட்டுள்ளது.

Advertisement

இந்த பகுதியில் நாளை மறுதினம் காலை 11 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும் தடையை மீறி டிரோன் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...