கோவையில் ஒரு தொகுதியில் கூட அவர்கள் வென்று விடக்கூடாது- முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை: வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Advertisement

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக SIR செயலை கண்டித்து கோவை சிவானந்தாகாலனி பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கம்யூனிஸ்ட், ஆதிஇந்திய தேசிய லீக், இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SIRயை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,
SIR குறித்து முதலில் எதிர்ப்பை பதிவு செய்தவர் நம் முதல்வர் ஸ்டாலின் தான் என்றார். IT, ED போன்றவற்றை கொண்டு வந்து அடக்கு முறையை முன்னெடுத்தார்கள் ஆனால் தோல்வியை தழுவியதால் தற்போது இந்த SIR மூலம் அடக்கு முறையை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்திய தேர்தல் ஆணையம் ஏன் அவசரமாக இதனை முன்னெடுத்தார்கள்? என்று கேள்வி எழுப்பி அவர் இதற்கு இந்த காலம் போதாது என்று தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும் அப்படி இருந்தும் அதனை செய்கிறார்கள் என விமர்சித்தார்.

Advertisement

பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் இதனை தமிழகத்தில் செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றார். அனைத்தையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று கூறும் ஒன்றிய அரசு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க எதிர்க்கிறது என்றார் பல்வேறு திட்டங்களை அளித்த திமுக அரசு மீண்டும் வென்று விட கூடாது என நினைத்து இவற்றையெல்லாம் செய்கிறார்கள் என்றார்.

அதிமுகவில் கண்னை மூடி கொண்டு எடப்பாடி பழனிசாமி SIR யை ஆதரிக்கிறார், அதிமுகவிற்கு இது தான் இறுதி தேர்தல் என்பதை நாம் செய்து காட்ட வேண்டும் என்றார். மேலும் தேர்தல் ஆணையத்தை பாஜக கையில் வைத்துள்ளது என்றும் கூறினார்.

2026ல் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விட கூடாது என்றார். அவினாசி மேம்பாலத்தை திறந்து வைத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் பெரியார் நூலகம் செம்மொழி பூங்கா என பல்வேறு திட்டங்களை அளித்து வருவதாகவும் கோவையில் வரலாறு காண வளர்ச்சியை எம்.எல்.ஏ இல்லாமலேயே முதல்வர் ஆக்கி உள்ளார் என்றார். எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து SIR முறியடிப்போம் என தெரிவித்தார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

செப்டம்பர் 17 நாளைய ராசிபலன்: தொழில், பணம், காதல்.. உங்கள் ராசிக்கு என்ன பலன்?

செப்டம்பர் 17, 2026 ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள், தொழில், பணம், குடும்பம், காதல் மற்றும் ஆரோக்கியம் குறித்த தகவல்கள். மீன ராசிக்கு சந்திராஷ்டமம்.

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...