தமிழக முதல்வரால் காவிரி நதிநீர் உரிமை பறிபோய் விடுமோ என்ற ஐயம் உள்ளது- விவசாய சங்கத்தினர் கோவையில் அளித்த பேட்டி…

கோவை: தமிழக முதல்வரால் காவிரி நதிநீர் உரிமை பறிபோய் விடுமோ என்ற ஐயம் நிலவுவதாக விவசாயி பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 19ம் தேதி கோவை கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இது குறித்து அனைத்து விவசாய சங்கங்கள சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு மாநாட்டில் என்னென்ன நிகழ்வுகள் இருக்கும் அதற்கான பொறுப்பாளர்கள் யார் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் இது குறித்து பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன் அந்த மாநாட்டில் 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்க இருப்பதாகவும் அன்றைய தினம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்த இடத்தில் அனுமதிக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். இன்று கோவை மாவட்டத்தை உள்ளடக்கிய அனைத்து விவசாய சங்க தலைவர்கள் இணைந்து கூட்டம் நடைபெற்றதாகவும் இதில் இந்த மாநாட்டின் வரவேற்பு குழு தலைவராக செல்லமுத்து, செயலாளராக ஏ எஸ் பாபு, துணைத் தலைவராக நொய்யல் பாசன விவசாய சங்க தலைவர் திருஞான சம்பந்தம் பொருளாளராக சுப்ரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்த மாநாட்டில் தேசிய அளவிலான கொள்கை திட்டங்களை தீர்மானங்களாக நிறைவேற்றி பிரதமரிடம் வழங்கப்பட இருப்பதாக கூறினார். அதில் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா புதுச்சேரி கேரளா தமிழ்நாடு உள்ளிட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் வேளாண் ஆர்வலர்கள் இணைந்து கொள்கை பிரகடனத்தை தயாரித்து வெளியிட இருப்பதாக கூறினார். மேலும் இதில் எந்த அரசியல் மாறுபட்ட கருத்துகளோ அரசியல் காரணங்களும் கிடையாது என தெரிவித்த அவர் இது ஒட்டுமொத்தமாக விவசாயிகள் நலன் கருதி நடைபெறும் மாநாடு என குறிப்பிட்டார்.

காவிரி நதி நீர் மேகதாது அணை குறித்து பேசிய அவர் காவிரி நதி நீரில் நாம் பெற்ற உரிமை பறிபோய் விடுமோ என்று அஞ்சத் தோன்றுவதாகவும் நாடு முழுவதும் ஆறுக்கும் மேற்பட்ட நடுவர் மன்றங்கள் அமைக்க பட்டது என்பதை குறிப்பிட்ட அவர் அதிலும் காவிரி நடுவர் மன்றம் தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடுவர் மன்றமாக அமைக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்த நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை குறிப்பிட்ட அவர் மத்திய அரசின் அரசுகளிலும் வெளியிடப்பட்டதை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி தொழில்நுட்ப குழு இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுவதாக தெரிவித்தார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடக மாநிலமும் தமிழ்நாடு மாநிலமும் முன் வந்ததை சுட்டிக்காட்டிய அவர் ஆனால் உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு மறு சீராய்வு மனு எதுவாயினும் உச்சநீதி மன்றத்தின் சம அதிகாரத்திற்கு உள்ள நடுவர் மன்றத்தில் தான் செயல்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியதையும் கூறினார்.

இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து அரசியல் லாபத்தோடு செயல்பட்டு வருவதாகவும் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக மத்திய அரசு அனுமதி கொடுத்ததாகவும் இது அரசியல் சாசனத்திற்கு முரணானது என தெரிவித்தார். எனவே காவிரி ஆணையம் இந்த வரைவு திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்டதே தவறு என்று தாங்கள் எடுத்து கூறி இருப்பதாகவும் தெரிவித்தார். பிறகு காவிரி ஆணையம், ஜல் சக்தி துறைக்கு அந்த அறிக்கையை அனுப்பி வைத்ததை தெரிவித்தார்.


தற்பொழுது கர்நாடக அரசாங்கம் தமிழ்நாடு அந்த வரைவு அறிக்கையை ஏற்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கின் பேரில் வழிகாட்டுதலை உருவாக்கி இருப்பதாகவும் அந்த வழிகாட்டுதல் பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிப்பதாக தெரிவித்தார். எனவே இது குறித்தான முறையான மேல்முறையீட்டு தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் தின வலியுறுத்தினார்.

நீதி அரசர்கள் தமிழக அரசின் வழக்கின் மீது வரைவு திட்ட அறிக்கையை ஆணையமும் ஜல் சக்தி துறையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம் அந்த பரிசீலனை கூட்டத்தில் தமிழக அரசின் கருத்தை கேட்டு தான் அடுத்த கட்ட முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி இருப்பதை குறிப்பிட்ட அவர் ஆனால் ஏற்கனவே வந்துள்ள நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நீர் பாசன விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கர்நாடக அரசு எந்த தடுப்பனையும் புதிய அணையும் கட்டக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளதையும் தெரிவித்தார்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையமும் ஜல்சக்தி துறையும் கர்நாடக அரசாங்கமும் கொடுத்த அந்த வரைவு திட்ட அறிக்கை அரசியல் சாசன விதிமுறைகளுக்கு புறம்பானது எனவே ஆணையத்தின் மீது வழக்கு தொடர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். தமிழக அரசு ஆணையத்தின் மீதும் ஜல்சக்தி துறையின் மீதும் வழக்கு தொடர மறுத்து கர்நாடக வரைவு திட்ட அறிக்கைக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் காரணமாக உச்சநீதிமன்றம் தற்பொழுது புதிய வழிகாட்டுதலை கொடுத்திருப்பதாகவும் இது தமிழக அரசு பெற்ற உரிமைகள் பறிகொடுக்கும் நடவடிக்கைக்கு சமமானது என குற்றம் சாட்டினார்.

கர்நாடக அரசின் முதலமைச்சர் பகிரங்கமாக அறிவிப்புகளை அறிவிக்கும் பொழுது தமிழக முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும் நீர்ப்பாசன துறை அமைச்சரின் அறிவிப்பு முக்கியத்துவம் வேறு மாதிரி இருப்பதாகவும் முதலமைச்சர் கொடுக்கின்ற பதில் தேசிய அளவில் ஒரு பார்வையை உருவாக்கும் அதுதான் இறுதியாகவும் இருக்கும் எனவே முதலமைச்சர் வாய் திறக்க மறுத்து தொடர்ந்து கர்நாடக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு இசைவாக செயல்படுகிறாரோ என்று ஐயம் எழுவதாக தெரிவித்தார்.

எனவே 50 ஆண்டுகாலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் போராடி பெற்ற உரிமையை தமிழக அரசு பறி கொடுத்து விடுமோ என்று ஐயம் எழுவதாகவும் அவ்வாறு நடந்தால் சென்னை உள்ளிட்ட 13 மாநகராட்சிகளை உள்ளடக்கிய ஐந்து கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் ஒட்டுமொத்தமாக பறிபோய்விடும் 22 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாலைவனமாக மாறும் தமிழகம் உணவு உற்பத்தியில் பின்னடைவை சந்திக்கும் எனவே தமிழக முதலமைச்சர் விரைந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மாநில வேளாண் துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, மாநில அரசுக்கு இது தென்னிந்திய அளவிலான மாநாடு எனவே ஒவ்வொரு மாநில முதலமைச்சர்கள் வேளாண்மை அமைச்சர்களை அழைக்கக்கூடாது என்றெல்லாம் எண்ணம் எங்களுக்கு கிடையாது தேசிய அளவில் ஒரு கொள்கை பிரகடனத்தை ஏற்படுத்த வேண்டும் அதனை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கின்ற அதிகாரம் மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் இருக்கிறது என்பதால் பிரதமரை மட்டும்தான் நாங்கள் அழைத்து உள்ளோம் அவர் மட்டும்தான் அந்த விழாவில் பங்கேற்க உள்ளார் அவர் முன்னிலையில் மத்திய அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுப்பதற்கான பரிந்துரைகளை இந்த மாநாட்டில் வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

தேசிய அளவில் ஒருங்கிணைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்று வருகிறது பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது பல்வேறு மாநிலங்களில் பேரிடர் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது என்பதால் தேசிய அளவில் இந்த மாநாட்டை கோவையில் நடத்துவதற்கு முடிவெடுத்தோம் ஆனால் அதை இயலாது என்பதால் தென்னிந்திய அளவில் நடத்த இருப்பதாகவும் இது போன்ற ஒவ்வொரு மண்டலங்களிலும் மாநாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.


காவிரி குறித்து நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முதலமைச்சர் கையில் கொடுத்துள்ளோம் அதனை முதலமைச்சர் பாதுகாக்க தவறி விடக்கூடாது என்பதுதான் எங்களுடைய அச்சம் என்று தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் அலட்சியம் காட்டுவார் என்றால் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழ்நாட்டில் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் எங்கள் அமைப்பின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் சொகுசு காரில் பிடிபட்ட வெளிநாட்டு மதுபானங்கள்- தேர்தல் பறக்கும் படை அதிரடி…

கோவை: கோவையில் சொகுசு காரில் இருந்த வெளிநாட்டு மதுபானங்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ​தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...