கோவை செம்மொழி பூங்கா திறப்பு குறித்து அப்டேட் கொடுத்த அமைச்சர் கே என் நேரு…

கோவை : செம்மொழி பூங்கா பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் இந்த மாத இறுதியில் முதல்வர் திறந்து வைப்பார் என்றும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.

கோவையில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பூங்கா பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இந்த மாத இறுதியில் முதல்வர் பூங்காவை திறந்து வைப்பார் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும், “பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளோம். இன்னும் இரண்டு முதல் மூன்று வேலைகள் மட்டும் பாக்கி உள்ளது. பிளே ஏரியா, வாட்டர் கார்டன், பேட் பே ஏரியா உள்ளிட்ட நான்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 23 பணிகளில் நான்கு பணிகள் மட்டும் மீதம். ஒரு வாரத்தில் முழு பணிகளும் முடிந்து, இந்த மாத இறுதிக்குள் பூங்கா பயன்பாட்டுக்கு வரப்படும்” என கூறினார்.

பூங்கா பணிக்காக ஏற்கனவே ரூ.167.25 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ.47 கோடி வழங்கப்பட்டு மொத்தம் ரூ.214.25 கோடியில் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

செம்மொழி பூங்காவில் மரங்கள் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளிக்கையில், “அரிதான மரங்கள் நடப்பட்டுள்ளன. ஆயிரம் வகை ரோஜாக்கள் நடப்பட்டுள்ளன. உலகில் இல்லாத வகை பூக்கள் மற்றும் செடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மரங்கள் நடவு நடைபெற்று வருகிறது; விரைவில் வளர்ந்து விடும்” என்றார். மேலும், பாதாள சாக்கடை பணிகள் எங்கும் நிறுத்தப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

துப்புரவு பணியாளர்கள் நிரந்தரம் குறித்த கேள்விக்கு முதலில் பதில் அளிக்காத அமைச்சர், மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டபோது, “இன்று காலை அவர்களுக்காக முதல்வர் ஆறு நலத் திட்டங்களை அறிவித்துள்ளார் — 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு, 3 வேளை உணவு, குழந்தைகளுக்கான கல்வி மானியம், மருத்துவ வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தனியார்மயமாக்கல் நடந்துள்ளது; இது இந்திய அளவில் எடுக்க வேண்டிய முடிவு” என்றார்.

பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்கும் என பாஜக கூறியதை எதிர்த்து, “பாஜக வேறு என்ன சொல்வார்கள்? தேர்தலில் ஜெயிப்பது நாங்கள்தான்; அதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்” என அமைச்சர் பதிலளித்தார்.

தவெக தலைவர் விஜய் கூறிய ‘யாரும் ஓட்டு போட முடியாத நிலை வரும்’ என்ற கருத்து குறித்து அமைச்சர், “68,000 பேர் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு பூத்துக்கும் BLO நியமிக்கப்பட்டுள்ளார். வாக்காளர் பட்டியலில் குளறுபடி இல்லை. 90% விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதியதாக சேர்ப்பவர்களுக்கு Form 6 வழங்கப்பட்டு வருகிறது. 30 நாள் சேர்ப்பு பணி முடிந்தவுடன் அடுத்த 30 நாட்கள் சரிபார்ப்பு நடைபெறும். ஓட்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை அரசு செய்யிறது” என்றார்.

கோவை சின்னவேடம்பட்டி ஏரி குறித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு, “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதுகுறித்து முதல்வரிடம் பேசி வருகிறார். நல்ல நீரை தேக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது” என கூறினார்.

கோவை தண்ணீர் விநியோகத்தைப் பற்றிய கேள்விக்கு, “ஒரு நாளுக்கு 380 MLD தண்ணீர் வழங்கப்படுகிறது. அதில் 10% ஆவியாகி, 85% கழிநீராக மாறுகிறது. அந்த நீரை சுத்திகரித்து விவசாயத்துக்கும் பூங்காக்களுக்கும் வழங்கப்படும்” என்றார்.

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் சென்னையில் தொடங்கியுள்ளதாகவும், இது கோவை மற்றும் மதுரையிலும் விரைவில் தொடங்கப்படும் 25 ஆண்டு திட்டம் என்றும் தெரிவித்தார்.

SIR படிவங்களை திமுக வாங்கிச் செல்கிறார்கள் என எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர், “BLO வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்குகிறார். நாங்கள் எப்படிச் சுருட்ட முடியும்? எங்கள் வேலை விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதே. அவர்கள் ஆள்களை விடாமல் கடைசி நேரத்தில் குறை சொல்கிறார்கள்” என கேள்வி எழுப்பினார். தற்போது அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

திமுக–தவெக போட்டி குறித்து விஜய் கூறியதற்கு, “எந்த திமுக மேடையில் அதை உறுதிப்படுத்தினோம்? அதை அவரிடமே கேளுங்கள்; எங்களிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என அமைச்சர் பதில் அளித்தார்.

திருப்பதிக்கு 44 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டதாக எழுந்த கேள்விக்கு, “என் குடும்ப உறவினர்கள் கொடுத்தார்கள். எனக்கு தெரிந்திருந்தால் வேண்டாம் என சொல்லியிருப்பேன்” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.