சாய்பாபா காலனியில் ஓரினச் சேர்க்கைக்கு வரவழைத்து செல்போன் பறிப்பு!

கோவை: சாய்பாபா காலனியில் ஓரினச் சேர்க்கையில் பழக்கமான மருத்துவமனை ஊழியரிடம் செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சேலத்தை சேர்ந்தவர் 21 வயது வாலிபர். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதியில் தங்கிருந்து அங்கு பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த சில வருடங்களாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது கோவை சாய்பாபா காலனியில் வசித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த முத்துராஜ் (22) என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

அவருடன் அந்த வாலிபர் தனிமையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி சாய்பாபா காலனி ஜீவா நகருக்கு வரும் படி அந்த வாலிபரை, முத்துராஜ் அழைத்துள்ளார்.

Advertisement

அந்த வாலிபரும் அங்கு வந்து முத்துராஜை சந்தித்தார். அப்போது முத்துராஜ் உடன் அவரது நண்பர்கள் வேலாண்டிப்பாளையம் காந்திநகரை சேர்ந்த நவீன் என்கிற ராகராஜ் (26) மற்றும் சாய்பாபா காலனி கேகே புதூர் அண்ணா நகரை சேர்ந்த விக்ரம் (25) ஆகியோர் இருந்துள்ளார்.

அவர்கள் அந்த வாலிபரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர். இதுகுறித்து அந்த வாலிபர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துராஜ் மற்றும் நவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

தப்பி ஓடிய விக்ரமை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சாய்பாபா காலனி பகுதியில் பதுங்கி இருந்த விக்ரமையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

உதயநிதி ஸ்டாலின் கைது சரியே- புகழேந்தி பேட்டி…

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக முதன்மை செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, உதயநிதி ஸ்டாலின் கைது சட்டப்படி சரியான நடவடிக்கை என்றும், அவரது பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து கருத்து தெரிவித்தார்.

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.