வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது! தாழ்வான பகுதிகளை கண்காணிக்க கோவை கலெக்டர் உத்தரவு

கோவை : கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை பாதிப்புகளை தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பவன்குமார் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தாழ்வான பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். அடைப்புகள் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிப்பதுடன், சாலைகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த சாலைகள் மற்றும் சிறுபாலங்களை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement

also Read: சிறுவாணி அணையில் தொடரும் கனமழை! 30 அடியை கடந்த நீர்மட்டம் – கோவை குடிநீர் விநியோகம் அதிகரிப்பு

ஊரக வளர்ச்சித்துறையினர் கிராமப்புறங்களில் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீரில் தேவையான அளவு குளோரின் கலக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்ய வேண்டும்.

Advertisement

சுகாதாரத்துறையினர் மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்துவதுடன், டெங்கு உள்ளிட்ட கொசு மூலம் பரவும் நோய்களை தடுக்க கொசுப்புழு ஒழிப்பு பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வேளாண்மைத்துறையினர் விவசாயிகளுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

Also Read: அறைக்குள் புகுந்து கல்லூரி மாணவர் மீது கொடூர தாக்குதல்! 9 பேர் மீது வழக்குப்பதிவு

மேலும், மழைநீர் தேங்கும் வயல்களில் உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தவும், பயிர் சேதம் ஏற்பட்டால் உடனடியாக கணக்கெடுப்பு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார்.

கோவையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

“திருடன்… திருடன்…” என அலறிய முதியவர்! உக்கடத்தில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்

உக்கடம் பேருந்து நிலையத்தில் முதியவரிடம் செல்போன் திருடிய ஒடிசா வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...