கேரள அரசு பேருந்தில் எடுத்து வரபட்ட தங்க மோதிரங்கள்- கோவையில் பறிமுதல்…

கோவை: கோவை அருகே ஆவணங்களின்றி கேரளாவில் இருந்து அரசு பேருந்தில் எடுத்து வரப்பட்ட தங்க மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

கோவையில் தமிழக – கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல் துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வாகனங்கள், தனியார் மற்றும் இரு மாநில அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து கோவை நோக்கி வந்த கேரளா அரசு பேருந்தை வாளையார் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்பொழுது அதில் உரிய ஆவணங்களின்றி 415 கிராம் தங்க மோதிரங்களை அம்மாநிலத்தைச் சேர்ந்த ஜாதி என்பவர் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கேரள மாநிலத் திருச்சூரில் நகைக் கடை நடத்தி வருவதும் உரிய ரசிதுகள் மற்றும் ஆவணங்களின்று கோவையில் உள்ள சிறு நகை கடைகளுக்கு சப்ளை செய்ய இந்த நகைகளை கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 415 கிராம் தங்க மோதிரங்களின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர் கோவை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு…

கோவை: ரேசன்கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...