திமுக அறிவித்த 3 மணி நேரத்தில் எங்கள் அறிவிப்பு இருக்கும்- கோவையில் வைகோ குறிப்பிட்ட விஷயம்…

கோவை: தொகுதி பங்கீட்டிற்காக திமுக குழு அமைத்த உடனே மதிமுக சார்பிலும் குழு அமைக்கபடும் என அதன் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .

அப்போது பேசிய அவர் மத்திய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும், 5 மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால் அதிக ஒதுக்கீடு செய்யபடும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமானது என தெரிவித்தார்.

அமெரிக்காவின் வரி கொடுமையில் இருந்து தப்பிக்க, ஜரோப்பிய யூனியன் ஒப்பந்தம் ஈடு கொடுக்கும் என தெரிவித்து இருக்கின்றார்கள் என குறிப்பிட்ட அவர் ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் 2027 ஏப்ரலுக்கு பின்புதான் வரும், அதுவரை மத்திய அரசு எப்படி சமாளிக்க போகின்றது என கேள்வி எழுப்பினார். மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை, நூற்பாலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் இல்லை என சுட்டி காட்டினார்.

11.7 லட்சம் கோடி கடன் வாங்க போகின்றோம் என்கின்றார்கள், ஆனால் 7 சதவீத வளர்ச்சியை அடைவோம் என்பது ஏற்கும் விதமாக இல்லை என்றார்.

மேலும் ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் வஞ்சிக்ப்படுகின்றது எனவும் குற்றம் சாட்டினார்.

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது போன்ற, கோரிக்கைகளை நாங்கள் என்றைக்கும் வைக்கவில்லை என்றும், அப்படி கோரிக்கை வைக்கின்ற நோக்கமும் இல்லை என தெரிவித்தார். திமுக நிச்சயம் தனி பெரும்பான்மை பெரும், மீண்டும் 2026 ல் ஸ்டாலின் முதல்வராக அமர்வார், திராவிடம் மாடல் ஆட்சி தொடரும் என்றும் தெரிவித்தார்.

பாலத்தீனம் தனி நாடாக இந்தியா ஆதரவு அளித்து இருப்பது நல்ல விஷயம் எனவும்
பாலஸ்தீனத்தை நேரு காலத்தில் இருந்து இந்தியா ஆதரித்தது, இடைக்காலத்தில்
நாரேந்தி்ரமோடி பொறுப்புக்கு வந்த பின்பு , இஸ்ரேலின் உறவை நெருக்கமாக்கிக் கொண்டனர் என்றார்.

பாலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை ஆரம்பத்திலிருந்து நாம் ஆதரித்து வந்திருக்கிறோம் என்றும், எங்கள் நிலைப்பாடு அது தான் என்றும் தெரிவித்தார்.

எம்ஸ்டீன் பைல்லில் பிரதமர் நரேந்திர மோடி பெயர் இருந்திருப்பதாக வெளியான தகவல் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், நரந்திரமோடிக்கு நாட்டில் நல்ல பேர் இல்லை எனவ தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை குழு அமைத்த பின்னர்தான் தொகுதிகள் குறித்து பேச முடியும் என்றும் தொகுதி பங்கீட்டிற்காக திமுக பேச்சுவார்த்தை குழு அமைத்த உடன் 3 மணி நேரத்திற்குள் , மதிமுக சார்பிலும் குழு அமைக்கபடும், எத்தனை இடங்கள் கேட்போம் என்பதை இப்போது செல்ல முடியாது என தெரிவித்தார். ஒரு சிலர் தங்கள் மனதிற்கு தோன்றியதை சொல்கின்றனர் ஆனால் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp