கோவையில் ரயில் மோதி காயமடைந்த பசுமாடு- மீட்புப்பணி துறையினர் மீட்டு சிகிச்சை…

கோவை: கோவையில் ரயில் தண்டவாளத்தில் அடிபட்ட பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Advertisement

கோவை ப்ரூக் பாண்ட் சாலை (Brook Bond Road) பின்புறம் உள்ள ரயில் தண்டவாளப் பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிருக்குப் போராடிய பசுமாடு ஒன்று அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

கோவை ப்ரூக் பாண்ட் சாலையின் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இன்று காலை பசுமாடு ஒன்று நடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ரயில் எதிர்பாராத விதமாக மாட்டின் மீது மோதியது. இதில் மாட்டின் கால் முறிந்ததுடன் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து ​ரயில்வே துறையினர் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் ​காயம் அடைந்து நகர முடியாமல் தவித்த பசுமாட்டிற்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், பலத்த காயங்களுடன் இருந்த அந்தப் பசுமாட்டை அதிகாரிகள் அனைவரும் இணைந்து பத்திரமாக மீட்டு, மேல் சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக அருகில் உள்ள கோசாலைக்கு (Gosala) வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

இது போன்ற “கால்நடைகளைச் சாலைகளிலும், ரயில் தண்டவாளப் பகுதிகளிலும் மேய்ச்சலுக்கு விடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும். இது தொடர்பாகத் தொடர் எச்சரிக்கைகள் விடுத்தும், உரிமையாளர்களின் அலட்சியத்தால் வாயில்லா ஜீவன்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.

Advertisement

இது போன்ற விபத்துக்களால் ரயில்கள் தடம் புரளும் அபாயமும் உள்ளது. எனவே, கால்நடைகளைத் தகுந்த பாதுகாப்பின்றி வெளியில் விடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நாளை ஆடி அமாவாசை… மறந்தும் கூட வீட்டில் இந்த 15 விஷயங்களை செய்யாதீர்கள்…!

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களை வழிபடும் முறைகள், தர்ப்பணம் செய்யும் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியமாக வீட்டில் தவிர்க்கப்படும் 15 விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.