Suriya யாரையும் கட்டிப்பிடிக்கல.. அந்த விஷயம் நடக்கல.. ஓபனாக பேசிய சூர்யா..!

மௌனம் பேசியதே திரைப்படத்தின் ரீ ரிலீசுக்காக நடிகர் Suriya புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வெளியான முதல் படம் மௌனம் பேசியதே. இந்த படத்தில் சூர்யா, த்ரிஷா, லைலா, நேகா என பலரும் நடித்திருந்தனர். இந்த மாதம் வரவுள்ள காதலர் தினத்தையொட்டி மௌனம் பேசியதே திரைப்படம் மறுவெளியீடாக வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கடந்த 2002-ல் வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் அப்போதே பல பாராட்டுகளைப் பெற்று வெற்றிப்படமானது அனைவரும் அறிந்த விஷயமே. இதனிடையே, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மறுவெளியீட்டுகாக நடிகர் சூர்யா சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மௌனம் பேசியதே திரைப்படத்தைப் பலரும் கொண்டாடுகிறார்கள். என் சிறந்த படங்களில் ஒன்று. மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தாலும் யாரையும் கட்டிப்பிடிக்காமலேயே உருவான காதல் திரைப்படம் மௌனம் பேசியதே. ஒழுங்கா தானடா இருந்தீங்க.. திடீர்னு எங்க இருந்துடா வருது இந்த LOVE? காதல் கண்ணுல இருந்து வரக்கூடாது, மனசுல இருந்து வரனும் என்று கூறியுள்ளார்.

மேலும், 24 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆன மௌனம் பேசியதே படம் இப்போதும் பலருக்கும் விருப்பமான படமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், இதன் மறுவெளியீட்டுக்காக நானும் காத்திருக்கிறேன் எனத் கூறியுள்ளார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.