வியாபரிகளே உஷார் ! ஒப்பணகார வீதியில் 20 செல்போன்கள் திருட்டு…!

கோவை: ஷட்டரை உடைத்து மொபைல் கடையில் 20 செல்போன் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

கோவை ஜிஎம் நகரை சேர்ந்தவர் முகமது அலி (43). இவர் ஒப்பணக்கார வீதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு முகமது அலி கடையில் வியாபாரத்தை முடித்து வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வழக்கம் போல முகமது அலி கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர் கடையினுள் சென்று பார்த்த போது விற்பனைக்கு வைத்திருந்த 20 செல்போன்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முகமது அலி பெரியகடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கடைக்கு வந்து அங்கு பதிவாகிருந்த கைரேகைளை பதிவு செய்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து முகமது அலி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையனை தேடி வந்தனர்.

Advertisement

அப்போது கடையின் ஷட்டரை உடைத்து செல்போன்களை கொள்ளையடித்து சென்றது பொள்ளாச்சி கோலார்பட்டியை சேர்ந்த லிங்க பூபதி (35) என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் பெரியகடை வீதி பகுதியல் பதுங்கி இருந்த லிங்க பூபதி மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 20 செல்போன்களையும் மீட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...