கோவையில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி! வாலிபர் கைது

கோவை : கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில், அதிகாலை நேரத்தில் ஏடிஎம் மெஷினை ஆயுதத்தால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் அங்கு பொதுமக்கள் பணம் எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக வந்து சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 16-ம் தேதி அதிகாலை மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

அங்கு சென்ற அந்த நபர், ஏடிஎம் மெஷினை ஆயுதம் கொண்டு உடைத்து, அதற்குள் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஏடிஎம் மெஷினை உடைக்கும் சத்தம் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் கவனித்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், ஏடிஎம் மையத்தை சுத்தம் செய்வதற்காக ஊழியர் சதீஷ்குமார் அங்கு வந்துள்ளார். அப்போது ஏடிஎம் மெஷினை ஒருவர் உடைத்துக் கொண்டிருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

Advertisement

உடனடியாக சதீஷ்குமார் அங்கிருந்து உதவி கேட்டு, அந்த வழியாக சென்ற சிலரின் உதவியுடன் மர்ம நபரை பிடிக்க முயன்றார். தொடர்ந்து அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சோலைமலை (30) என்பது தெரியவந்தது.

Advertisement

ஏடிஎம் மெஷினை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் அவர் இந்த செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் ஏடிஎம் மைய ஊழியர் உடனடியாக கவனித்து அந்த நபரை பிடித்ததால், ஏடிஎம் மெஷினில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்படாமல் தப்பியது.

இதையடுத்து காட்டூர் போலீசார் சோலைமலையை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதிகாலை நேரத்தில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து மெஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் காந்திபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவையில் ஈச்சர் லாரியில் நெழிந்த பாம்பு…

கோவை: எல் அண்ட் டி பைபாஸில் திரில் ஈச்சர் லாரி இன்ஜினில் பதுங்கிய 8 அடி சாரைப் பாம்பு மீட்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில்...