உடலுக்கு மேல் உடல்களை புதைக்கும் நிலை – கோவையில் ஆக்கிரமிப்பால் ஏற்படும் அவலம்

கோவை: ஆக்கிரமிப்பால் உடலுக்கு மேல் உடல்களை புதைக்கும் அவலம் ஏற்படுவதாக கிணத்துக்கடவு பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement

மயானத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் ஒரு உடலுக்கு மேல் இன்னொரு உடலை புதைக்கும் அவலம் ஏற்படுவதாகவும் எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்துள்ளனர்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொலவம்பாளையம் கிராமத்தில் அரிஜன மயானம் உள்ளது. சுமார் 84 செண்ட் அளவில் உள்ள அந்த மயானத்தை சொலவம்பாளையம், எம்ஜிஆர் நகர், அண்ணா நகர், சிக்கலாம்பாளையம், ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த இடமானது அரசு ஆவணங்களில் அரிஜன மயானம் மற்றும் வண்டிப்பாதை என பதிவாகி இருக்க கூடிய சூழலில் வண்டி பாதையில் தற்பொழுது தார் சாலை அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் அதனை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்துவது, குப்பைகளை கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் ஒருவர் உயிரிழந்தால் உடலை புதைப்பதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் மேலும் புதைப்பதற்கு இடம் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குப்பைகள் கொட்டப்பட்டு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் உடல்களை புதைப்பதற்கு கூட போதிய இடம் இல்லை என்றும் அதனால் ஒவ்வொரு உடல்களுக்கு மேல் மற்றொரு உடலை புதைக்கும் அவலம் ஏற்படுவதாகவும் எனவே அந்த மயான இடத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...