கோவை: கோவை தடாகம் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, மாட்டை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, சோமையனூர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை தடாகம், உச்சயனூர் பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளது. பின்னர் எஸ்.எம். நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாட்டுக் கொட்டகைக்குள் சென்ற யானை, அங்கிருந்த மாட்டு தீவனத்தை தின்றுள்ளது.
Also Read: கோவையில் 19 வயது இளைஞர் கைது… அல்கொய்தாவுடன் ஆன்லைன் தொடர்பா?
இதையடுத்து அங்கிருந்து யானை வெளியேறியபோது, மாட்டுக் கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் சத்தமிட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த யானை, ஒரு மாட்டை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது சுதாரித்துக் கொண்ட அந்த மாடு, தாவிக் குதித்து பின்புறம் சென்றதால் யானையிடம் இருந்து தப்பியது. பின்னர் காட்டு யானையும் அங்கிருந்து நகர்ந்து சென்றது.
Also Read: கோவையில் பாதிரியார் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு! ரேஸ்கோர்சில் பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




