கோவை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் அசாதாரண சூழல்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வந்த கர்ப்பிணிகள் தரையில் அமர்ந்துள்ள வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Advertisement

அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கான மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக ஒருபுறம் கூறப்படும் பட்சத்தில், மறுபுறம் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் தவிக்கும் எதார்த்தமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கோவை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் (Scan) எடுப்பதற்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள், அமர்வதற்கு இருக்கை வசதி போதிய அளவி இல்லாததால் தரையில் அமர்ந்து இருக்கும் காட்சிகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான மாதாந்திர பரிசோதனை மற்றும் ஸ்கேனிங் பிரிவுகளில் இன்று காலை முதல் கூட்டம் அதிகமாகக் காணப்படும் நிலையில் நீண்ட நேரம் வரிசையில் காத்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவர்களுக்குத் தேவையான இருக்கைகள் (Benches) அங்கு போதுமானதாக இல்லாததால் வேறு வழியின்றி தரையிலேயே அமர்ந்து காத்து இருக்கின்றனர்.

Advertisement

தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இருக்கைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும், ஸ்கேன் வசதிகளை கூடுதலாக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. தமிழக வெற்றி கழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போலவே பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...