கோவை: வெள்ளலூரில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளலூர் அருகே உள்ள சக்தி விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபினந்த் (வயது 43). இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து அருகில் இருப்பவர்கள் அவரது சகோதரர் எழிலனுக்கு தகவல் தெரிவித்தனர்.
போத்தனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அபிநந்த் இருந்த வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
அதன் பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் அழுகிய நிலையில் அபிநந்த் கிடந்து உள்ளார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடிப்பழக்கம் உடைய அபிநந்த் மனைவி அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துசென்று விட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபிநந்த் வீட்டில் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

