கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி மார்ச் 2026 மாதத்திற்கான பயிற்சி 05.03.2026 வியாழக்கிழமை அன்று அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.850/நபர் நேரிடையாக செலுத்த வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 590/நபர் (அடையாள சான்று அவசியம்). பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை ஆகும்.
மேலும் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்.
தொடர்பு எண்:
0422-6611336, 0422-6611226; 9629496555; 6379298064
மின்னஞ்சல்: pathology@tnau.ac.in

