சந்திர கிரகணம்: மருதமலை முருகன் கோவில் நிர்வாகம் கட்டுப்பாடு அறிவிப்பு!

கோவை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு பக்தர்கள் அனுமதி குறித்து மருதமலை முருகன் கோவில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வையே நாம் சந்திர கிரகணம் என்கிறோம். இந்த நேரத்தில் பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். அப்போது நிலவு அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

2026ஆம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம் வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த நாளில் தோன்றும் சந்திரனை “ரத்த நிலவு” என்று அழைக்கின்றனர்.

வரும் 3ஆம் தேதி மாலை 4.45 மணி முதல் 5.40 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதனால் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகம் கூறுகையில்,

“சந்திர கிரகணம் காரணமாக மார்ச் 3ஆம் தேதி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் மதியம் 1 மணி வரை மட்டுமே சுவாமி தரிசனத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், சந்திர கிரகணம் நிகழும் முன்பு கோவில் நடை அடைக்கப்படும். மறுநாள் (04.03.2026) காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்ட பின்பு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்றனர்.

இந்த செய்தியை கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் மருதமலை முருக பக்தர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.