டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு; போலீசார் விசாரணை

கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (45) என்பவர் டாஸ்மாக் பாரில் மது அருந்தியபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகராஜனுக்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகன விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அடிக்கடி தலைச்சுற்றல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

Also Read: கோவையில் தொடரும் மின்தடை; பொதுமக்கள் கடும் அவதி!

Advertisement

இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்ற நாகராஜன், அங்கு மது அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துடியலூர் போலீசார், நாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சிலர் பிரச்சனைகளை ஏற்படுத்த முயற்சி- சூலூர் எம்.எல்.ஏ பேட்டி…

கோவை: கணியூர் விவகாரத்தில் சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்த முயல்வதாக எம்.எல்.ஏ சுகுமார் தெரிவித்துள்ளார். கணியூரில் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே தள்ளுமுள்ளு வீடியோ வைரலான நிலையில் சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் விளக்கம் அளித்துள்ளார். கோவை...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...