நடந்து சென்று குறைகளை கேட்டறிந்த கோவை போலீஸ்…

கோவை: கோவை பேரூர் டி.எஸ்.பி கால்நடையாக ரோந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

Advertisement

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், கோவை நகரில் இனி காலை மற்றும் மாலை வேளைகளில் காவலர்கள் தங்களின் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து சென்று ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் குறைகளை போலீசாரிடம் எளிதில் தெரிவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உத்தரவின் அடிப்படையில், பேரூர் சரக காவல் துறை டி.எஸ்.பி நேற்று மாலை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியில் இருந்து குபேரபுரி வரை நடந்து சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.

ரோந்துப் பணியின் போது, பள்ளிகள் முடிந்து வீட்டிற்குச் செல்ல சாலையில் நின்று கொண்டு இருந்த மாணவர்களிடம் டி.எஸ்.பி கலந்துரையாடி, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கினார்.

பாதுகாப்பு மற்றும் சி.சி.டி.வி ஆய்வு:

Advertisement

இதனைத் தொடர்ந்து, சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் பேருந்துக்காகக் காத்து இருந்த பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து
சக போலீசாரிடம் அவர் கேட்டறிந்தார். மேலும், அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பிற்காக சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்துவது குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து குபேரபுரி பகுதியில் வசித்து வரும் வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற டி.எஸ்.பி, அவர்களின் தங்குமிடம் யாருடையது, அவர்கள் யாரிடம் வேலை செய்கிறார்கள் என்பது குறித்தும், அவர்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் தங்கி இருப்பதற்கான உரிய உரிமங்கள் உள்ளதா ? என்றும் கேட்டறிந்து சோதனை நடத்தினார்.காவல் துறையினரின் இந்த அதிரடி கால்நடை ரோந்துப் பணி அப்பகுதி மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜனநாயகன் பார்த்து அழுவது ஏன்?- கோவை அமைச்சரின் உருக்கமான விளக்கம்…

கோவை: ஜனநாயகன் படம் பார்த்து அழுதது குறித்து அமைச்சர் சம்பத்குமார் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாநகராட்சி 83வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி., மைதானம் அருகே வாலிபால், கபடி மற்றும் இறகுப்பந்து போட்டிக்கான உள்ளரங்கு விளையாட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...