கோவை: அரசு பள்ளியில் படித்து ஐஏஎஸ் ஆக பணியாற்றி வருவதாக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. இப்பள்ளியின் நூற்றாண்டு விழா,பள்ளி நூற்றாண்டு நினைவு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பள்ளி கட்டிடங்களை கட்டித் தந்த தனியார் குழுமத்திற்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு முதன்மை விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கலந்து கொண்டு பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து, கல்வி மலர் புத்தகத்தை வெளியிட்டு நன்கொடையாளர்களை பாராட்டினார். சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டார்.
மேலும் விழாவில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கலந்து கொண்டார்.
விழாவிற்கு பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியரும் பள்ளியின் மூத்த மாணவருமான ராமலிங்கம் தலைமை வகித்தார்.விழாவிற்கு வந்திருந்தவர்களை பள்ளியின் ஆசிரியர் சுகுணா வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நானும் இதே போல பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளியில் படிக்கும் போது இரண்டு வகுப்பறை நிகழ்வு இருக்கும் ஒரு சின்ன ஆற்றலை தாண்டி தான் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலைமை இருந்தது நினைவுபடுத்தினார்.
தற்பொழுது ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய வருவதாக பெருமிதம் கொண்டார்.அப்போது நடுநிலைப்பள்ளி தான் படிக்கும் போது ஒரு நாளைக்கு 7 முதல் 8 முறை உணவு உண்ணுவதாகவும் உணவு பழக்கம் தனக்கு அதிகரித்து இருப்பதாகவும் நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பேசினார்.

