கோவையில் திறக்கப்பட்டது நான் முதல்வன் செயல்பாட்டு மையம்…

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் செயல்பாட்டு மையம் திறக்கப்பட்டது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் பாரதியார் பல்கலைக்கழக செயல்பாட்டு மையத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததையொட்டி, கோயம்புத்தூர் மாவட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி மையத்தின் செயல்பாட்டினை துவங்கி வைத்தனர்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் பாரதியார் பல்கலைக்கழக செயல்பாட்டு மையத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையொட்டி, கோயம்புத்தூர் மாவட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதிபராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி மையத்தின் செயல்பாட்டினை துவங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், பாரதியார் பல்கலைக்கழக நான் முதல்வன் செயல்பாட்டு மைய அலுவலர் விமலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியை ஊக்குவிக்கும் திட்டமாகும். இத்திட்டம் பொறியியல் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ITI மாணவர்களுக்கு எவ்வித நிதிச்சுமையும் இன்றி கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வழிகாட்டிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம் திறன்களை வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த திறன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 2025-2026 ஆண்டு அறிவிப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 மாநில கலை மற்றும் அறிவியல் மற்றும் ஒரு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் நான் முதல்வனுக்காக பல்கலைக்கழக” செயல்பாட்டு மையங்கள் ரூபாய் 1.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்றுஅறிவித்தார்கள்.

அதன்படி, நான்முதல்வன் பல்கலைக்கழக செயல்பாட்டு மையங்கள் (Naan Mudhalvan University Operational Cell) ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரால் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.
அதில் கோயம்புத்தூர் மாவட்டம், பாரதியார் பல்கலைக்கழத்தில் நான் முதல்வன் பாரதியார் பல்கலைக்கழக செயல்பாட்டு மையமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நான் முதல்வன் பல்கலைக்கழக செயல்பாட்டு மையங்கள் நான் முதல்வன் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தவும். கண்காணிக்கவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் (NMUOC) ஒரு Nodal Centre ஆக செயல்படும். தொழில்துறைக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பாடப்பிரிவுகளைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களோடு இந்த மையங்கள் ஒருங்கிணைக்கும்.

மாணவர்களுக்கு Internship மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்க இந்த மையங்கள் உதவும். மாணவர் சேர்க்கை, திறன் சான்றிதழ் பெறுதல் மற்றும் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்களைக் கண்காணிக்க இந்தமையங்கள் உதவும்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video