முதலில் காசு… அப்புறம் வேலை… கையும் களவுமாக சிக்கிய மாநகராட்சி ஊழியர்கள்!

கோவை: குடிநீர் இணைப்பிற்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கோவையில் மாநகராட்சி டேப் இன்ஸ்பெக்டர், பிளம்பரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கெம்பட்டி காலனியைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் அவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கோவை மாநகராட்சி அலுவலகத்தை அணுகினார். இதற்கான அனுமதியை உதவி ஆணையர் வழங்கினார்.

Advertisement

அதன் பிறகு இந்த குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணியை காந்தி பார்க்கில் வாட்டர் டேங்க் கீழ் பகுதியில் உள்ள மாநகராட்சி குடிநீர் விநியோக அலுவலகத்தில் பணியாற்றும் குடிநீர் இணைப்பு டேப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் பிளம்பர் ஈஸ்வரன் ஆகியோர் மேற்கொண்டனர்.

அப்போது வீட்டிற்கு குடிநீர் குழாய்கள் பொருத்தி இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று கேட்டு உள்ளனர். உடனே வீட்டு உரிமையாளர் வேலையை செய்து கொடுங்கள் அதன் பிறகு பணம் தருகிறேன் என்று கூறி உள்ளார்.

ஆனால், முதலில் பணம் வேண்டும் என்று கேட்டு உள்ளனர். இதனால் வீட்டு உரிமையாளர் கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து, லஞ்சம் கேட்ட ஊழியர்களை போலீசார் மடக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பிரபுதாஸ் மற்றும் போலீசார் காந்தி பார்க் வாட்டர் டேங்க் அருகில் மறைந்து நின்றனர்.

அப்போது வீட்டு உரிமையாளர் டேப் இன்ஸ்பெக்டர் மோகனை சந்தித்தார். அப்போது அவர்கள் கேட்ட லஞ்சப் பணம் ரூ.5 ஆயிரத்தை வீட்டு உரிமையாளர் மோகனிடம் கொடுத்து உள்ளார். அதை பிளம்பர் ஈஸ்வரனிடம் கொடுக்கும்படி மோகன் கூறி உள்ளார்.

அதன்படி வீட்டு உரிமையாளர் பிளம்பர் ஈஸ்வரனிடம் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த போலீசார் பிளம்பர் ஈஸ்வரன் மற்றும் டேப் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோரை மடக்கி கைது செய்தனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

  1. What will be the punishment??2 or 3 days suspension….then again they will join in duty and they continue….no use

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு…

கோவை: கோவை இராமநாதபுரம் பகுதியில் உழைப்பாளர் நலக்கூடம் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தபோது, இராமநாதபுரம்...

Video