கோவையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

கோவை: கோவையில் ஆகஸ்ட் மாதம் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். 22.08.2026 அன்று காலை 8 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து உற்பத்தி துறை. ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐடி துறை. ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக 15000 மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

Advertisement

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள். செவிலியர்கள், பொறியாளர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. மேலும், அனுமதி முற்றிலும் இலவசம்.

இம்முகாமிற்கு வருகை புரியும் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம் (Bio-data) மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும்இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

Advertisement

வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login ல் விவரங்களை பதிவு @ (https://youtu.be/urD7KDTpvjA?si=x5YC4RMoq4xDBvHH) . விவரங்களுக்கு மனுதாரர்கள் 0422-2642388, 9499055937 என்ற எண்ணில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

www.tnprivatejobs.tn.gov.inஇம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் என்ற இணையதளத்தில் பதிவு செய்து அவ்விணையதளத்தின் வாயிலாக இவ்வேலைவாய்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்தல் வேண்டும்மேலும் விபரங்களுக்கு வேலையளிப்போர் (Employer) 8056358107 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும் இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் மனுதாரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

23 ஆண்டுகளுக்கு பின் இந்திய எல்லையில் மகனை மீட்ட தாய்…

கோவை: காணாமல் போய் 23 ஆண்டுகளுக்குப் பின் பஞ்சாப்பில் தன் மகனை மீட்ட தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியினர். இவர்களுக்கு பிரகாஷ், பிரபு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...