கோவை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர பெண் காவலர்கள் பேரணி மேற்கொண்டனர்.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பெண்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை அரசு சார்பிலும் தனியார் அமைப்புகள் சார்பிலும் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
கோவையிலும் பல்வேறு பகுதிகளில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பந்தய சாலை பகுதியில் தனியார் அமைப்பு சார்பிலும் அரசு சார்பிலும் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பெண் காவலர்கள் இணைந்து மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
கோவை பந்தய சாலையில் முழுவதும் 200க்கும் மேற்பட்ட மாநகரப் பெண் காவலர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.
இதில் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் மாநகர காவல் துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிங்க் நிற காவல் ரோந்து வாகனமும் இந்த விழிப்புணர்வு பேரணியில் இடம் பெற்றிருந்தது.



