கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

கோவை: கோவை நீதிமன்றம் வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோவை நீதிமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த சோதனையில் அது புரளி என்று தெரியவந்தது.

இந்த நிலையில் இன்றும் கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி பாதுகாப்பு மையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ந்இந்த தகவல் கோவை ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

உடனே அங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் போலிசார் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை செய்தனர். இலவச சட்ட உதவி பாதுகாப்பு மையத்தில் உள்ள ஒவ்வொரு அறை மற்றும் ஊழியர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள், ஆவணங்கள் இருந்த பகுதிகள் என அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு போலீசார் கருவி மூலம் சோதனை செய்தனர்.

ஆனால் நீண்ட சோதனைக்கு பிறகு இந்த வெடிகுண்டு மிரட்டலும் புரளி என்று தெரியவந்தது. அதன் பிறகு நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அலுவலர்கள் நிம்மதி அடைந்தனர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவி- ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த கோவை காவல்துறை…

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பாமல் காணாமல் போன மாணவியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் காணாமல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...