கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம் (Coimbatore Coffee Table Book – screening of the Coimbatore Documentary film) ஆவணப் படத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் (தீவிரவாத தடுப்பு பிரிவு) பத்ரி நாராயணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் தேவந்திரகுமார் மீனா மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் பேசியதாவது:-
இப்புத்தகத்தில், கோயம்புத்தூரின் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகிய நிலப்பரப்புகள், விலங்குகள், பறவை, பூச்சிகள் வகைகள் கோயம்புத்தூரின் தாவரவியல், தாவரங்களின் உயிர்ச்சக்தி, சந்தைகள், பழங்குடியினர் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை கொண்டாட்டங்கள்,

மாவட்ட மக்களின் கலாச்சாரங்கள், கோயம்புத்தூரின் உணவு வகைகள், கல்வி மற்றும் தொழில் துறை வளர்ச்சிகள், கோயம்புத்தூரின் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், வங்கி மற்றும் பொருளாதாரம், கோயம்புத்தூரின் சுற்றுலா, நகர்ப்புற நிலப்பரப்பு, உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புத்தகம் தயாரிக்கும் பணிகளில் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்போடும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் தயாரிக்க உறுதுணையாக இருந்த அனைத்து துறை அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் எனது மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று பேசினார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில்துறை வளர்ச்சிகள், கல்வித்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை, மருத்துவ துறை, பட்டு வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி குறித்த (screening of the Coimbatore Documentary film) என்ற ஆவணக் குறும்படம் இந்த நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

எரிபொருள் நுகர்வு- கோவையில் ஆட்சித்தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்…

கோவை: எரிபொருள் நுகர்வு தொடர்பாக என்னை நிறுவன அதிகாரிகள் ஹோட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள் ஆகியோருடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வு தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவன...

Video

கோவையில் மண் அரிப்பில் சிக்கிய லாரி

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் தண்ணீர் குழாய் உடைந்து ஏற்பட்ட மண் அரிப்பு அவ்வழியாக சென்ற லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி போத்தனூர் பகுதி பள்ளிவாசல் சாலையில் தண்ணீர் குழாய் உடைந்து...