கோவையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆலோசனை

கோவை: தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆலோசனை நடத்தி, ஆய்வு செய்து வருகிறார்.

இதனிடையே கோவை வந்த அவர் நேற்று காலை கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஐ.ஜி அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அவர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து அவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மருதமலை உண்டியலில் குவிந்த தங்கம், வெள்ளி!

இதையடுத்து கோவை மாநகர போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நகரில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், போக்குவரத்து தீர்வு, விசாரணையில் உள்ள வழக்குகள், முடித்து வைக்கப்பட்ட வழக்குகள், போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிடவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், கோவை மாநகர துணை கமிஷனர்கள் அசோக் குமார், கார்த்திகேயன், தேவநாதன், நுண்ணுறிவு பிரிவு உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை முடித்துக் கொண்டு மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பாதுகாப்பின்றி தூய்மைப் பணியாளர்கள் பணி – வீடியோ காட்சிகள்

கோவையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி குளத்தில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் குறித்து அதிர்ச்சி, மாநகராட்சி கண்காணிப்பு கோரி மக்கள் வலியுறுத்தல்.

Video

கோவையில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வடவள்ளி பகுதியில் செல்போன் வாங்குவது போல நடித்து, இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய...