Coimbatore latest news: கோவையில் தவெக நிர்வாகி மீது வழக்கு!

கோவை: தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சரவணம்பட்டி சத்தி ரோடு மாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றபோது, சிவசாமி என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவரில், “எங்கள் சின்னம் விசில்” என்ற வாசகத்துடன் விசில் படம் மற்றும் நடிகர் விஜயின் உருவப்படம் வரையப்பட்டிருந்தது.

Click here to read news பீளமேட்டில் ஜிபே மூலம் வாலிபரிடம் வழிப்பறி… மக்களே உஷார்! 

மேலும், “சரவணம்பட்டி பகுதி, வடக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, கோவை நகர மாவட்டம்” என்றும் சுவரில் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார், தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் பிரசாரம் செய்யப்பட்டிருந்ததால், வீட்டு உரிமையாளர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

Click here to read news அரசு பேருந்துகளில் சுமை ஏற்றத்தடை; தேர்தல் நடத்தை விதிமுறை எதிரொலி

அதில், அந்த பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் இதை வரைந்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எஸ்ஐ கருப்புசாமி, சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் தவெக நிர்வாகி மனோகரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

அணியை போருக்கு தயார் செய்ய வேண்டும்- கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு…

கோவை: நமது அணியை தேர்தல் போருக்கு தயார் செய்யவேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக இளைஞர்ணி தேர்தல் பிரச்சார முன்கள பணியாளருடனான ஆலோசனை தமிழ்நாடு முழுவதும் நடைபெற...

Video

கோவையில் கார் தீ பிடிப்பு- சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்…

கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.