Crime News: காந்திபுரத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்!

Crime News: காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

விருதுநகரை சேர்ந்தவர் தனசேகரன் (36). இவர் கோவையில் தங்கிருந்து அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் தனசேகரன் காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் சோமனூர் பஸ் நிறுத்தும் பகுதியில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி கொண்டு இருந்தார்.

Click here to Read News கோவையில் வீட்டில் விபசாரம்: அழகி, மூதாட்டி உட்பட 3 பேர் கைது!

Advertisement

அப்போது அங்கு வந்த தனியார் பஸ் டிரைவர் சோமனூரை சேர்ந்த கார்த்திகேயன் (26) மற்றும் கண்டக்டர் சாய்பாபா காலனியை சேர்ந்த சந்தூரபாண்டியன் (31) ஆகியோர் தனசேகரனிடம் வந்து எதற்காக பயணிகளை ஏற்றி கொண்டு இருக்கிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், சந்தூரபாண்டியன் தகாத வார்த்தைகளால் திட்டி தனசேகரனை சரமாரியாக தாக்கினர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர் அவர்களை தடுத்து நிறுத்தி தனசேகரனை மீட்டனர்.

Advertisement

Read also ஒரே மாதிரி உடை… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் – திரிஷா..!

பின்னர் பலத்த காயம் அடைந்த தனசேகரனை கோவை அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தனசேகரன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் தனசேகரனை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் கார்த்திகேயன் சந்தூரபாண்டியனை கைது செய்து, சிறையில் அடைந்தனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் மண்ணெண்ணய் குண்டு வீசிய கும்பலில் ஒருவர் கைது…

கோவை: கோவையில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவாக இருந்த கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டார். காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.