தொழுகைக்கு சென்ற சிறுவன் பலி! கோவையில் சோகம்

கோவை: கோவையில் தொழுகைக்கு சென்ற சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நசீர் (38). அவரது இளைய மகன் அனஸ் (9). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

Click here to read news பெற்றோர்களே குழந்தைகள் முன் சண்டையிடாதீர்… கோவையில் சோக சம்பவம்!

நேற்று முன்தினம் இரவு அனஸ் செல்வபுரம் பகுதியில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

Advertisement

இதனால் நசீர் பல்வேறு இடங்களில் தனது மகன் அனசை தேடி கொண்டு இருந்தார். அப்போது ஜமாத்தை சேர்ந்த துணை செயலாளர் அகமது என்பவர் நசீருக்கு போன் செய்து அனஸ் பள்ளி வாசல் அருகே மயங்கி கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

Click here to Read news விஜய் அவசரமாக மும்பைக்கு போனது இதுக்குதானா? அட்லீ விட்டு விசேஷத்திலும் சர்ச்சை!

Advertisement

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நசீர் விரைந்து சென்று தனது மகன் அனசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அனசை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதை கேட்டு நசீர் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். அது அங்குள்ளவர்களை கண் கலங்க வைத்தது. இதையடுத்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமுதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.