கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு சார்பிலும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை பிபிஜி தொழில்நுட்ப கல்லூரி சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.
Read also எரிவாயு தட்டுப்பாடு- கோவையில் பள்ளியின் அழுத்தத்தால் மாணவனுக்கு நேர்ந்த சோகம்…
இதில் 300 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் சிலம்பம், ஸ்க்கேட்டிங் செய்தவாரும் பேரணி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இந்த வாக்கத்தான் நிகழ்வில் தேர்தல் அடையாளச் சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்ட வாக்குவீரன் இருவாச்சி பறவையும் இடம்பெற்று இருந்தது.
Read also கோவையில் மனைவியுடன் செல்போன் உரையாடல் விபரீதம்.. இளைஞர் பரிதாப பலி!
தேர்தல் நாளன்று அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும், முதல் முறை வாக்களிப்பவர்கள் நன்கு சிந்தித்து கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் அப்பொழுதுதான் சிறந்த முதல்வரை தேர்ந்தெடுக்க முடியும் என்று பேரணியில் பங்கேற்ற பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

