நயன்தாராவுக்கு அடிச்சது யோகம்… பாலிவுட் பாதுசாவை தொடர்ந்து அடுத்த ஜாக்பாட்!

20 வருடங்களுக்கும் மேலாக உச்சநடிகையாக இருக்கும் நடிகை நயன்தாராவுக்கு பாலிவுட்டில் இருந்து மற்றுமொரு ஜாக்பாட் வாய்ப்பு அமைந்துள்ளது.

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார். தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக உச்ச நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வருகிறார்.

Read news :விஜய்க்கு தான் என்னுடைய ஆதரவு…தவெகவில் இணையும் நடிகை?

Advertisement

தமிழ், தெலுங்கு, மலையாளாம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்த அவர், பாலிவுட்டுக்கு செல்ல மாட்டேன் என ஒரு காலத்தில் விடாப்பிடியாக இருந்த அவர், பணம், புகழ் தான் முக்கியம் என்பதை உணர்ந்து பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

Jawan Nayan

கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் என்பது போல இளமைக் காலம் போன பிறகு பாலிவுட்டில் நுழைந்தார். அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கே ஜோடியாக நடித்தார்.

குழந்தைக்கு தாயாகவும், படத்தில் முக்கிய நடிகையாக வந்த நயன்தாராவுக்கு பாலிவுட் சிவப்பு கம்பளமே விரித்தது. முதல் படமே ஷாருக்கான், படமும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் என உச்சத்திற்கு சென்றார்.

Advertisement
Toxic Nayanthara

பின்னர் பாலிவுட்டில் வாய்ப்பில்லாமல் இருந்தாலும், தமிழில் அடுத்தடுத்து 4 படங்களை கைவசம் வைத்துள்ளார். அதை தவிர, கன்னடம், ஆங்கிலம், தமிழில் உருவாகி வரும் டாக்சிக் படத்திலும் நடித்துள்ளார். இதில் கேஜிஎஃப் புகழ் யாஷ் நாயகனாக நடித்து வரும் நிலையில், பான் இந்தியா படங்கள் நயன்தாராவை நோக்கி வந்தன.

Read news:Coimbatore Special Train: கோவை வழியாக கேரளா-கர்நாடகாவுக்கு சிறப்பு ரயில்

இந்த நிலையில், பாலிவுட் வாய்ப்பு மீண்டும் நயன்தாரா வீட்டின் கதவை தட்டியுள்ளது. சல்மான் கான் நடிக்கும் படத்திற்கு நாயகியாக நயன்தாரா தேர்வாகியுள்ளார்.

Salman Nayan

இந்த படத்தை வாரிசு படத்தை இயக்கிய வம்சி இயக்க உள்ளார். தில் ராஜூ தயாரிக்கிறார். முதன்முறையாக சல்மான்கானுடன் ஜோடி போடுகிறார் நயன்தாரா.

சல்மான் கான் தற்போது இந்திய சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலை மையமாக வைத்து உருவாகி வரும் மாத்ருபூமி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் வம்சி படத்தின் சூட்டிங் ஆரம்பாகும் என கூறப்படுகிறது.

Nay

சல்மான், நயன்தரா நடிக்கும் இந்த படம் ஆக்ஷன் படமாகவும், பான் இந்தியா படமாக உருவாகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பது நயன்தாராவின் மார்க்கெட் இன்னும் உச்சம் பெறும் என கோலிவுட் வட்டாரத்தில் நம்பப்படுகிறது.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

இனி படங்களில் நடிக்க மாட்டேன்.. கெனிஷா பிரிந்ததும் ரவி மோகன் ‘திடீர்’ அறிவிப்பு!

விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு வரும் வரை திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என நடிகர் ரவி மோகன் தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.