Coimbatore Special Train: கோவை வழியாக கேரளா-கர்நாடகாவுக்கு சிறப்பு ரயில்

Coimbatore Special Train: கோவை வழியாக கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதை முன்னிட்டு கர்நாடக மாநில ஹூப்ளியில் இருந்து கேரள மாநில கொல்லம் வ்ரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்பட உள்ளன.

வண்டி எண் 07347: ஹூப்ளி – கொல்லம் சிறப்பு ரயில் ஏப்ரல் 2ம் தேதி காலை 7.05 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

வண்டி எண் 07348: கொல்லம் – ஹூப்ளி சிறப்பு ரயில் ஏப்ரல் 3ம் தேதி காலை 10.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

  • ஏசி 2-டயர்
  • ஏசி 3-டயர்
  • ஸ்லீப்பர் கிளாஸ்
  • பொது இரண்டாம் வகுப்பு
  • மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி
  • லக்கேஜ்-கம்-பிரேக் வேன் பெட்டி

READ NEWS :தேர்தல் களம்… பிரசாரத்திற்கு தனியாக போக வேண்டிய நிலை? வானதிக்கு உள்ளக எதிர்ப்பு!

இந்த ரயில் ஹவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தவணகேரே, பிரூர், அர்சிகேரே, தும்கூர், எஸ்எம்விடி பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காரபெட், குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கண்ணூர், மாவேலிக்கரா மற்றும் காயகுளம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சேலம் கோட்ட ரயில் நிலைய நேரப்படி, 07347 ஹூப்ளி – கொல்லம் சிறப்பு ரயில் ஏப்ரல் 2ம் தேதி சேலத்தில் இரவு 8.15 மணி முதல் 8.25 மணி வரை, ஈரோட்டில் இரவு 9.20 மணி முதல் 9.25 மணி வரை, திருப்பூரில் இரவு 10.03 மணி முதல் 10.05 மணி வரை, போத்தனூரில் இரவு 11.03 மணி முதல் 11.05 மணி வரை நின்று செல்லும்.

Read news: கடன் வாங்கியவரிடம் இனி உருட்டல் மிரட்டல் இனி நடக்காது…!

அதேபோல், 07348 கொல்லம் – ஹூப்ளி சிறப்பு ரயில் ஏப்ரல் 3ம் தேதி போத்தனூரில் மாலை 6.18 மணி முதல் 6.20 மணி வரை, திருப்பூரில் மாலை 7.18 மணி முதல் 7.20 மணி வரை, ஈரோட்டில் இரவு 8.25 மணி முதல் 8.30 மணி வரை, சேலத்தில் இரவு 9.20 மணி முதல் 9.30 மணி வரை நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

புலியகுளத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டிய செந்தில் பாலாஜி!

அம்மன்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயர் சூட்டிய செந்தில் பாலாஜி கவனம் ஈர்த்தார்.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...