கோவை திமுகவில் மீசை வைத்த ஆம்பிளைகள் இல்லை- கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரம்…

கோவை: கோவை மாவட்ட திமுகவில் மீசை வைத்த ஆம்பிளைகள் ஒருத்தர்கூட இல்லை, வெளியூரில் இருந்து வேட்பாளர்களை களம் இறக்குகிறார்கள் என அதிமுக சிங்காநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisement

கோவையில, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், கே.ஆர். ஜெயராம் இன்று நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டு சுற்று வட்டார பகுதிகளில் வீடு,வீடாக சென்று அதிமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு திவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் ஆராத்திகள் எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

Read news: கோவையும் கரூரும் இரண்டு கண்கள்- பிரச்சாரத்தை துவக்கிய செந்தில்பாலாஜி…

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட செயலாளரும், தேர்தல் பொருப்பாளருமான ரமேஷ்குமார், மற்றும் அமமுக, பாட்டாளி மக்கள் கட்சி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisement

பரப்புரையில் பேசிய சிங்காநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் கே.ஆர். ஜெயராம், கோவை மாவட்ட திமுகவில் மீசை வைத்த ஆம்பிளைகள் ஒருத்தர்கூட இல்லை, தேர்தல் என்றாலே வெளியூரில் இருந்து வேட்பாளர்களை களம் இறக்கும் திமுக என்று சிங்காநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Read news:Coimbatore Special Train: கோவை வழியாக கேரளா-கர்நாடகாவுக்கு சிறப்பு ரயில்

Advertisement


மேலும் கோவையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு செந்தில் பாலாஜி அல்ல எத்தனை செந்தில்பாலாஜியை இறக்கினாலும் பின்னங்கால் பிடரியில் அடிக்க கோவை மக்கள் விரட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தலைமையில் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். என்றும் கழக ஆட்சியில் கழக பொதுச்செயலாளர் கோவை மாவட்டத்திற்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் பரப்புரையில் ஈடுபட்டார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...