இது நமது மானப்பிரச்சனை; கோவையில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை: கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:

சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம், கட்டுமானப் பொருட்கள் விலை என அனைத்தையும் உயர்த்தியதே திமுக அரசின் சாதனை. இளைஞர்கள் மிகவும் கெட்டுப்போய்விட்டனர். எங்கும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. போலீசார் வேலை செய்வதே இல்லை

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் பாதுகாப்பு கிடைக்கும் என்பது கோவை மக்களுக்கு நன்றாக தெரியும். கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராவார். சட்டம்-ஒழுங்கும் பாதுகாக்கப்படும்.

Read news: கோவை ரவுடிகள் மீது போலீஸ் வேட்டை 800க்கும் மேற்பட்ட ரவுடிகள் கண்காணிப்பில்

கோவை வடக்கு தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், கோவை மக்கள் தாமரைச் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள் என்றும்

பாஜக குறித்து திமுக விமர்சனம் செய்வதை சுட்டிக்காட்டிய அவர், “பாஜக எதுவும் செய்யவில்லை என்று திமுக சொல்கிறது. ஆனால் அதிமுக ஆட்சியில் 63,000 கோடி ரூபாயில் மெட்ரோ திட்டம், 11 மருத்துவக் கல்லூரிகள், அனைவருக்கும் வீடு உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

அமெரிக்கா-ஈரான் போர் சூழ்நிலையை குறிப்பிட்ட அவர், “மற்ற நாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் பிரதமர் தலைமையிலான ஆட்சியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனை பாராட்ட வேண்டாமா? அதிமுக ஆட்சி வந்ததும் மீண்டும் பிரதமரிடம் கேட்டுப் பெற்றுத்தருவோம்.

Read news : சுவர் இடிந்து விழுந்து தாய், மகன் படுகாயம்; வீட்டு உரிமையாளர், காண்டிராக்டர் மீது வழக்கு

மேலும், “நாங்கள் செய்த திட்டங்களுக்காக மக்கள் வாக்களிப்பார்கள். தைரியம் இருந்தால், ஏதாவது ஒரு திட்டத்தை செயல்படுத்தினோம் என்று கூறி செந்தில்பாலாஜி வாக்கு கேட்கட்டும்” என சவால் விடுத்தார்.

கூட்டணிக் கட்சிகள் குறித்து பேசிய அவர், “நமது கட்சியினர் கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து மரியாதை கொடுக்க வேண்டும். நமக்கு எதிரி திமுக தான். மக்கள் திமுக ஆட்சியை அகற்ற நினைக்கிறார்கள். எங்கு சென்றாலும் மீண்டும் வாங்க என்று கூறுகின்றனர்.

இறுதியாக, “வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். இன்னும் 20 நாட்கள் கடினமாக பணியாற்ற வேண்டும். இது நமது மானப்பிரச்சனை. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். பெண்களும் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

புலியகுளத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டிய செந்தில் பாலாஜி!

அம்மன்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயர் சூட்டிய செந்தில் பாலாஜி கவனம் ஈர்த்தார்.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...