கோவை: மகாவீர் ஜெயந்தி தினத்தில் கோவையில் பதுக்கி வைத்து மது விற்ற 5 பேர் கைது; 721 மது பாட்டில்கள் பறிமுதல்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
Read news : கோடையில் கொட்டும் முடி – எளிய தீர்வு…!
இதையடுத்து, கோவை மாநகர போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதுக்கி வைத்து மது விற்ற சண்முகராஜ் (25), காயத்ரி (25), கலையரசன் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
READ NEWS :தேர்தல் களம்… பிரசாரத்திற்கு தனியாக போக வேண்டிய நிலை? வானதிக்கு உள்ளக எதிர்ப்பு!
அதேபோல், கெம்பட்டி காலனியில் மது விற்ற நாகராஜ் (39) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மது பாட்டில்களுடன், விற்பனை செய்யப்பட்ட பணமாக ரூ.1,100 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், பீளமேடு பகுதியில் நின்றிருந்த ஆட்டோ ஒன்றை போலீசார் சோதனை செய்தபோது, அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவங்களில் மொத்தமாக 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 721 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

