நாயுடன் கோவிலுக்குள் நுழைந்த திரிஷா.. வெடித்த சர்ச்சை!

நடிகை திரிஷா அண்மைக்காலமாக சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், தற்போது கோவிலுக்குள் நாயை அழைத்து சென்றது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

Advertisement

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக கோலோச்சி வருகிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

அண்மைக் காலமாக திரிஷா எது செய்தாலும் அது தலைப்பு செய்தியாக மாறிவிடுகிறது. சமீப நாட்களாக நடிகர் விஜய்யுடன் திரிஷா இணைத்து பேசப்பட்டு வருவது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

Question about Vijay..Trisha's shock reaction at the airport!

இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த திரிஷா, தற்போது செய்தியாளர்களின் கேள்விகளை புறக்கணித்து வருகிறார். இந்த நிலையில் எப்போதும் சமூக வலைதளம் பக்கம் ஆக்டிவ்வாக உள்ள அவர், தனது நாயை வைத்து பல புகைப்படங்கள், வீடியோவை எடுத்து பதிவிட்டு வந்தார்,. அப்படித்தான் அவர் மற்றொரு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

Advertisement

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அம்மன் கோவிலுக்கு திரிஷா, சென்றுள்ளதை புகைப்படமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தனது நாயுடன் சென்றதை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளா புகைப்படம் தான் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இன்ஸ்டா பக்கத்தில், தனது செல்லப்பிராணியின் முதல் கோவில் விசிட் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
Trisha Controversy

அந்த ஸ்டோரியில், நாயுடன் திரிஷா இருப்பது போன்று உள்ளது. ஆனால் உண்மையில் அவர் கோவிலுக்குள் வைத்து அந்த புகைப்படத்தை எடுத்தாரா என்பது தெரியவில்லை என ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர், கோவிலுக்குள் நாயை அழைத்து செல்லலாமா என்ற கேள்வியை முன்வைத்து, திரிஷாவை விளாசி வருகின்றனர்.

சிலர் நாயை பைரவர் என்றும், அதனால் கோவிலுக்குள் அழைத்து சென்றது தப்பில்லை, நாயை சிலர் தெய்வமாக வணங்கி வருகின்றனர் என திரிஷாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் அவர் கோவிலுக்குள் நாயை அழைத்து சென்றாரா அல்லது காரில் கோவிலுக்கு வந்ததை வைத்து முதல் முறை தனது செல்லப்பிராணியின் கோவில் விசிட் என பதிவிட்டுள்ளாரா? என்பது தெரியவில்லை. இதற்கு திரிஷாதான் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Trisha's hugging photo made headlines!

ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி வரும் திரிஷா, தற்போது சமூக வலைதளங்களில் அவர் எது பதிவிட்டாலும், அது பூதகரமாகிவிடுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

Flipkart Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...