கோவை:கோவை வடக்கில் இரண்டாம் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வீடு, வீடாகச் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் இன்று தனது இரண்டாம் நாள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார்.
Read news: தோசை சுட்டு வாக்கு சேகரித்த கோவை தவெக வேட்பாளர்…
இன்று காலை முதல் கோவை சாய்பாபா காலனி, ரத்தினபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானதி சீனிவாசன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகம் காணப்படும் கண்ணபுரம், கண்ணபுரம் கிழக்கு மேல் வீதி, கண்ணபுரம் குடிசைப் பகுதி, ஜாகிர் உசேன் வீதி, பெரியார் நகர், அம்பேத்கர் வீதி, காமராஜர் வீதி, கருணாநிதி நகர், ராஜ் நகர், ராமசாமி வீதி, அன்னை சத்யா நகர், பழனிச்சாமி வீதி மற்றும் பெரிய கண்ணப்பன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் ஆதரவு கோரினார்.
Read news:தொண்டாமுத்தூரில் தவெக-அதிமுகவுக்கு இடையே தான் போட்டி – நாஞ்சில் சம்பத் – வீடியோ
ஒவ்வொரு வீதிக்கும் சென்றபோதும் அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களை நேரில் சந்தித்த வானதி சீனிவாசன், கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை எடுத்துரைத்து, கோவையின் வளர்ச்சிக்காக தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதற்கும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவதற்கும் உறுதி அளிப்பேன் எனவும் அவர் வாக்குறுதி வழங்கினார்.

