TN2026 படத்திற்கு அனைவரும் வாக்களித்து வருகின்றனர்- கோவை வந்த படக்குழு தெரிவிப்பு…

கோவை: TN2026 படம் 234 தொகுதிகளிலும் வெற்றிகரமாக ஓடி வருவதாகவும் மக்கள் அனைவரும் படத்திற்கு வாக்களித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இயக்குநர் உமாபதி ராமய்யா இயக்கத்தில் நடிகர்கள் நட்டி சுப்ரமணியம், தம்பி ராமய்யா, எம்.எஸ் பாஸ்கர், ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள TN2026 திரைப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. படக்குழுவினரும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பார்வையாளர்களை சந்தித்து திரைப்படம் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை வந்த படக்குழுவினர்களான இயக்குநர் உமாபதி ராமய்யா, நடிகர்கள் நட்டி சுப்ரமணியம், தம்பி ராமய்யா ஆகியோர் ப்ராட்வே திரையரங்கிற்கு சென்று பார்வையாளர்களிடம் கலந்துரையாடினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய நடிகர் நட்டி சுப்ரமணியம், படத்தை அனைவரும் பாராட்டுகின்றனர் என்று குறிப்பாக குழந்தைகளுக்கு குல்கந்த்குமார் கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தார். பார்வையாளர்கள் விருப்பம் என்பது நிலையாக இருக்காது அது மாறிக்கொண்டே தான் இருக்கும் என்று தெரிவித்தார். இந்த படத்தில் உள்ள அனைத்து காட்சிகளும் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்றும் அதற்கு மூல காரணம் தம்பி ராம்மயா தான் என்று தெரிவித்தார்.

Advertisement

இந்த படத்தில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது எந்த ஒரு தனி மனித தாக்குதலும் அல்ல எந்த ஒரு கட்சியை சார்ந்தோ இல்லை என்று தெரிவித்த அவர் இது ஒரு அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பு தான் அதனை பார்வையாளர்கள் ரசிக்கிறார்கள் என்று தெரிவித்தார். மேலும் விஜய் பற்றி எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனங்களையும் நாங்கள் காட்டவில்லை என்று கூறினார். அமைதிப்படை படத்திற்கும் இந்த படத்திற்கும் சமூக வலைத்தளங்களில் கம்பேரிசன் முன் வைப்பது அது ஒரு பெரிய விஷயம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

ஜனநாயகன் திரைப்படம் வலைத்தளத்தில் லீக் ஆனது தொடர்பான கேள்விக்கு, அது மிகப்பெரிய நஷ்டம் தான் அவ்வாறு செய்யக்கூடாது அது போன்று இணையத்தில் ஏதேனும் படங்கள் வெளியானால் யாரும் அதனை ஆதரிக்க வேண்டாம் அதில் பல்வேறு மக்களின் உழைப்புகளும் பொருட்செலவும் உள்ளது என தெரிவித்தார். விஜய் இந்த படத்தை பார்க்க நேரம் இருக்குமா என்று தெரியவில்லை தேர்தல் முடிந்ததும் பார்க்கலாம் என்றார்.

Advertisement

தொடர்ந்து பேசிய தம்பி ராமய்யா, இந்த படம் அரசியல் நய்யாண்டி படம் என்றும் இந்த தகைமுறைக்கு ஏற்றவாறு இப்படம் அமைந்துள்ளதாக தெரிவித்தார். அரசியல் சூழலில் 234 தொகுதிகளிலும் வெற்றி நடை போடுவதாக தெரிவித்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பு பல்வேறு விமர்சனங்கள் வந்ததாகவும் ஆனால் தற்பொழுது அவை அனைத்தும் மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் இது மக்களுக்கான படம் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய படம் என்றும் தெரிவித்தார்.

ஜனநாயகன் படம் லீக் ஆனது தொடர்பாக பேசிய அவர், இளைய தளபதியின் சினிமா அந்த தளத்தில் லீக் ஆனால் கூட தற்பொழுது வரை பலரும் பார்க்கவில்லை, ஒரு நடிகர் அவரது ரசிகர்களை எவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் அதேபோல் ரசிகர்களும் அதனை பார்த்து விட்டால் தலைவர் வருத்தப்படுவார் தயாரிப்பாளர்களுக்கும் பல்வேறு நஷ்டம் ஏற்படும் என்று ரசிகர்களும் கட்சி இயக்கத்தை சார்ந்தவர்களும் பலரும் பார்க்காமல் இருப்பது தங்களைப் போன்றவர்களுக்கும் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்று இருப்பதாக குறிப்பிட்டார். தங்கள் படம் 234 தொகுதிகளிலும் ஓடி வருகிறது எங்களுக்கு எதிர் கட்சியே இல்லை என்று தெரிவித்தார். எங்களின் TN2026 க்கு மக்கள் அனைவரும் வாக்களித்து வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய இயக்குனர் உமாபதி ராமய்யா, இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது எனவே மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார். அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தை பாருங்கள் என்றும் படத்தை பார்த்தவர்கள் உறவினர்களுக்கு இப்படம் குடித்து எடுத்துக் கூறுங்கள் என்று தெரிவித்தார். சென்சார் போர்டு யாருக்கும் ஆதரவு அளிக்காது அவர்களுக்கு என ஒரு வழிமுறை உள்ளது என்றும் தங்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை அவர்கள் வழங்கினார்கள் இந்த படத்தில் பணம் கொடுப்பது போன்ற எந்த ஒரு காட்சிகளும் இருக்கக் கூடாது அப்படி இருந்தால் தேர்தலுக்குப் பிறகுதான் வெளியிட முடியும் என்றார்கள் எனவே சென்சார் போர்டு ரூல்ஸ் படி பல்வேறு காட்சிகளை நீக்கினோம் அதனால் இந்தப் படம் வெளியிட அனுமதி கிடைத்தது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் ஆந்திரா சந்திரபாபு நாயுடுவை எடுத்துக்காட்டாக கொண்டுதான் அந்த கதாபாத்திரத்தை எடுத்ததாகவும் தெரிவித்தார். படம் வெளியாவதற்கு முன்பு தவறான தகவல்கள் பரவியதால் சில குளறுபடிகள் நடந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் அப்பாவிற்கு அரசியல் அறிவு அதிகம் இருந்தது தங்களுக்கு பேருதவியாக இருந்ததாக கூறினார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...