இன்று பிரதமர், உள்துறை அமைச்சர் வருகை- போக்குவரத்து மாற்றம்… மக்களே கவனம்

கோவை: பிரதமர் முதல்வர் உள்துறை அமைச்சர் கோவை வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Advertisement

இன்று (18.04.2026) கோவை மாநகரில் பிரதமர், தமிழக முதல்வர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் கோவை வருகை புரிவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கோவை மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர். ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.

நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக வெளியே செல்லும் பேருந்துகள்
மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பில் U-Turm செய்து புலியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக L&T பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

Advertisement

நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள்
நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோலப்பாளையம், காளப்பட்டி நால் ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.
நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக செல்லும் இலகுரக வாகனங்கள் அவினாசி ரோடு டைட்டல் பார்க் சந்திப்பில் U-Turn செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

18.04.2026 தேதியன்று பிரதமர், தமிழக முதல்வர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் வருகையை யொட்டி மாலை 16.00 மணி முதல் இரவு 20.00 மணி வரை விமான நிலையத்திற்கு பயணிகளை இறக்கி விடவும். ஏற்றிச் செல்லவும் வரும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள் விமான நிலைய நுழைவாயில் வரை வர தடை செய்யப்படுகிறது.

Advertisement

எனவே அன்றைய தினம் விமான நிலையத்திற்கு வருபவர்கள் மாலை 4.00 மணிக்கு முன்பாக விமான நிலையம் வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மாலை 4.00 மணிக்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

18.04.2026 ஆம் தேதியன்று காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது. 17.04.2026 மற்றும் 18.04.2026 ஆகிய இரண்டு நாட்கள் கால் டாக்ஸிகள் மற்றும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்திற்குள் Parking செய்ய அனுமதியில்லை.

எனவே மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு கொடுத்து, தங்களது பயண திட்டம் மற்றும் பயண பாதையை வகுத்து விரைவான பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...